பெருமையுடன் உங்கள் தியாகு.

Saturday, May 10, 2008

அக்னி

அக்னி 3
விண்ணை நோக்கு! நாம் மட்டும் ஏகாந்தமாக இல்லை. மாபெருமிந்த பிரபஞ்சம் நம்முடன் நட்புடன் உள்ளது. கனவு கண்டு உழைப்போருக்கு மட்டும் உன்னத வெகுமதி அளிக்கிறது.”
“இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை! இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை! வல்லமையே வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.”
“3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா? அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் கைப்பற்றினார். நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை. எந்த நாட்டையும் கைபற்ற வில்லை. யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”
டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி


புதுதில்லி மே-7. ஒரிஸ்ஸா மாநிலம் சண்டிபூர் என்னும் இடத்தில் இ ருந்து இன்று காலை 9.55 மணிக்கு அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தா க்கும் சக்தி கொண்ட அக்னி-3 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.
48 டன் எடையும், 16 மீட்டர் உயரமும் கொண்டதுமான அக்னி-3 ஏவு கணை, 1.5 டன் எடைகொண்ட அணுஆயுதங்களை தாங்கிக் கொண்டு தரையில் இருந்து புறப்பட்டு, 3000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள த ரை இலக்கை தாக்கக்கூடிய திறன் கொண்டதாகும்.
கடந்த 2006-ல் மேற்கொள்ளப்பட்ட அக்னி ஏவுகணை சோதனை தோ ல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தே தி நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை வெற்றி பெற்றது. இப்போது மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த அக்னி-3 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
அக்னி 5
அடுத்த கட்ட முயற்சியாக பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அக்னி ஏவுகணை தொலைவை 4000 k.m ஆக அதிகரிக்க திட்டமிட்டுளது . இன்னும் 2 ஆண்டுகளில் இதன் திட்டபணிகள் முடிந்து விடும்

2 comments:

வால்பையன் said...

இதனால் இந்தியாவின் பசி, பட்டினி போய்விடுமா?

வால்பையன்

தியாகு said...

இத்திட்டத்தை கைவிட்டுவிட்டால் இந்தியாவின் பசி, பட்டினி போய்விடுமா?