பெருமையுடன் உங்கள் தியாகு.

Friday, September 5, 2008

தோல்வி

கனவுகள் சிதைவுறுகின்றது- தோற்கையில்
இழுவிசையால் மழையில் ஒரு துளியாகி
மண்ணில் பட்டு தெறிக்கின்ற நீர் போல .

தோல்வியும் ஓர் உந்து சக்தி - இரு
நிலைகளுக்குட்பட்டு பின் இழுக்கப்படுகின்றதோர்
அம்பு முன் நோக்கி செல்கின்றதை போன்று

Monday, June 30, 2008

எரிபொருள் பிரச்னை

வேலை நிமித்தமாக வெளியூர் சென்று அலுவலகம் சென்றால் வழக்கிற்கு மாறாக ஒரே பரபரப்பாக இருந்தது . லாரி வேலை நிமித்தம் காரணமாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தி நகரில் எங்கும் பெட்ரோல் கிடைக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன் . எனது இருசக்ர வாகனத்தில் பெட்ரோல் குறைந்த அளவே இருப்பதால் அருகில் உள்ள பகுதிக்கு சென்று பெட்ரோல் நிரபிகொள்ள சென்றேன் . மணிநேர காத்திருப்புக்கு பிறகு 13 litre கொள்ளளவு உள்ள எனது வாகனம் அரை litre கூடுதலாக பிடித்து (நன்றி சரியான அளவிற்கு ). ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அலுவலகம் சென்றால் சிமெண்ட் டன் ஒன்றிற்கு 100 ரூபாய் உயர்வதாக சொன்னார்கள் .லாரி வேலை நிமித்தம் காரணமாக பெட்ரோல் டீசல் தட்டுபாடு மட்டும் இன்றி அத்யாவசிய விலையும் உயரக்கூடும் . லாரி வேலை நிமித்தம் காரணமாக கூறப்படுவது டீசல் விலை அரசு ஏற்றியதும் .மேலும் என்னை நிறுவனங்கள் premium டீசல் என்ற பெயரில் விலை அதிகமாக விற்பதே காரணம் ஆகும் . இதே போல் பெட்ரோல் விலையை அரசு 5 ரூபாயும் பெட்ரோலிய நிறுவனங்கள் 5 ரூபாயும் உயர்த்தி உள்ளது பெட்ரோலிய பொருட்கள் மீது அரசு 20 வரை litre ஒன்றிக்கு வரி விதிக்கிறது . கச்சா என்னை விலை ஏறிகொண்டிருக்கும் இவ்வேளையிலும் வரி குறைப்பு அரசுக்கு நிதி நெருக்கடியை தரும் என்று மாண்புமிகு நிதியமைச்சர் கூறுகிறார் . ஆனால் வளர்ச்சி திட்டதிற்கு சலுகை என்ற பெயரால் சிறப்பு பொருளதார மண்டலம் என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட பகுதிகளான !சென்னையிலும் ,ஸ்ரீ பெரும்புதூர்ரிலும் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது . முழு வரிவிலக்கு அளிக்க படவில்லை என்றாலும் பெரும் கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும் ஏனினில் வரி விலக்கு என்பது அந்நிறுவனங்களின் லாபத்தை மேலும் அதிகரிக்கும் ஒரு செயல் அவ்வளவே .நம்முடைய நிதி அமைச்சருக்கு வரி என்ற பெயரால் நடுதரவர்கத்தின் பையில் உள்ள பணத்தை பிடிங்குவது பிடித்தமான ஒன்று . வட்டி விகிதம் உயர்வு விலை வாசி ஏற்றம் என்று எல்லாதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் .சென்னை யில் மட்டும் ஒரு நாளைக்கு 10 மில்லியன் litre பெட்ரோலியம் விற்பனை ஆகும் .அதாவது ஒரு நாளைக்கு அரசிற்கு 20 கோடி வரை வரிமூலம் வருவாய்கிட்டும் . ஆண்டிற்கு 7000 கோடி வருவாய் ? சென்னையில் மட்டும் , இதில் 50சதவிகிதம் உள்கட்டமைப்பிற்கு செலவிட்டு இருந்தால் கூட இன்று சென்னை உலகில் சிறந்த நகரமாக இருந்திருக்கும் .அரசியல்வாதிகளின் கொள்ளை அடிக்கும் பணமாக வரி பணம் விரையமாகி கொண்டுறிகிறது .

Wednesday, May 21, 2008

பணம் காய்க்கும் மரம்

ipl போட்டியின் தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் பெற்று உள்ளது அனைவரும் அறிந்ததே . போட்டியின் இடையே ஒளிபரப்பாகும் விளம்பரத்திற்கு பத்து வினாடிக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது . இதே உலக கோப்பை t20யில் விளம்பரகட்டனமாக பதினைந்து வினாடிக்கு இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே அறை இறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கு விளம்பர கட்டணம் பத்து வினாடிக்கு பத்து லட்சம் என சோனி அறிவித்துள்ளது . இந்த மூன்று போட்டிகளின் முலம் சோனி ஆறு கோடி ரூபாய் வரை வருவாய் கிட்டும். தொலைக்காட்சி ஒருமை முலம் பெறப்படும் வருவாயில் இருபது சதவிகிதம் bcciகும் எழுபது சதவிகிதம் அணி உரிமையாளர் கும் கிடைக்கும் . கிரிக்கெட் iplபோட்டிகள் பொன்முட்டை இடும் வாத்து இல்லை அது ஒரு தங்க சுரங்கம் என்றே எனக்கு தோன்றுகிறது .

Thursday, May 15, 2008

உருளைகிழேங்கே இனி உணவு

வங்கதேச மக்கள் உணவு முறையை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தபடுகிறார்கள் ஏனெனில் அரசி உயர்வு கடந்த ஓராண்டில் நாற்பது சதவிகிதம் உயர்ந்து உள்ளது அதேபோல் கோதுமை விலை ஓராண்டில் 150 % உயர்ந்து உள்ளது .உருளைகிழங்கு அதிகவிளைச்சல் காரணமாக 8 ரூபாய்கு கிடைக்கிறது . அரசி விலையோ 24.60 , கோதுமை 27 ரூபாய் என்பது ஒரு வங்கதேச தொழிலாளி இன் ஒருநாளின் பாதி வருமானம் ஆகும் . இந்தியா அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து இருப்பதாலும் , நர்கிஸ் புயலால் மியன்மார் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் மேலும் அரிசி விலை கடுமையாக உயரகூடும் .

Saturday, May 10, 2008

அக்னி

அக்னி 3
விண்ணை நோக்கு! நாம் மட்டும் ஏகாந்தமாக இல்லை. மாபெருமிந்த பிரபஞ்சம் நம்முடன் நட்புடன் உள்ளது. கனவு கண்டு உழைப்போருக்கு மட்டும் உன்னத வெகுமதி அளிக்கிறது.”
“இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை! இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை! வல்லமையே வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.”
“3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா? அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் கைப்பற்றினார். நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை. எந்த நாட்டையும் கைபற்ற வில்லை. யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”
டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி


புதுதில்லி மே-7. ஒரிஸ்ஸா மாநிலம் சண்டிபூர் என்னும் இடத்தில் இ ருந்து இன்று காலை 9.55 மணிக்கு அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தா க்கும் சக்தி கொண்ட அக்னி-3 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.
48 டன் எடையும், 16 மீட்டர் உயரமும் கொண்டதுமான அக்னி-3 ஏவு கணை, 1.5 டன் எடைகொண்ட அணுஆயுதங்களை தாங்கிக் கொண்டு தரையில் இருந்து புறப்பட்டு, 3000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள த ரை இலக்கை தாக்கக்கூடிய திறன் கொண்டதாகும்.
கடந்த 2006-ல் மேற்கொள்ளப்பட்ட அக்னி ஏவுகணை சோதனை தோ ல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தே தி நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை வெற்றி பெற்றது. இப்போது மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த அக்னி-3 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
அக்னி 5
அடுத்த கட்ட முயற்சியாக பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அக்னி ஏவுகணை தொலைவை 4000 k.m ஆக அதிகரிக்க திட்டமிட்டுளது . இன்னும் 2 ஆண்டுகளில் இதன் திட்டபணிகள் முடிந்து விடும்