பெருமையுடன் உங்கள் தியாகு.

Monday, June 30, 2008

எரிபொருள் பிரச்னை

வேலை நிமித்தமாக வெளியூர் சென்று அலுவலகம் சென்றால் வழக்கிற்கு மாறாக ஒரே பரபரப்பாக இருந்தது . லாரி வேலை நிமித்தம் காரணமாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தி நகரில் எங்கும் பெட்ரோல் கிடைக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன் . எனது இருசக்ர வாகனத்தில் பெட்ரோல் குறைந்த அளவே இருப்பதால் அருகில் உள்ள பகுதிக்கு சென்று பெட்ரோல் நிரபிகொள்ள சென்றேன் . மணிநேர காத்திருப்புக்கு பிறகு 13 litre கொள்ளளவு உள்ள எனது வாகனம் அரை litre கூடுதலாக பிடித்து (நன்றி சரியான அளவிற்கு ). ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அலுவலகம் சென்றால் சிமெண்ட் டன் ஒன்றிற்கு 100 ரூபாய் உயர்வதாக சொன்னார்கள் .லாரி வேலை நிமித்தம் காரணமாக பெட்ரோல் டீசல் தட்டுபாடு மட்டும் இன்றி அத்யாவசிய விலையும் உயரக்கூடும் . லாரி வேலை நிமித்தம் காரணமாக கூறப்படுவது டீசல் விலை அரசு ஏற்றியதும் .மேலும் என்னை நிறுவனங்கள் premium டீசல் என்ற பெயரில் விலை அதிகமாக விற்பதே காரணம் ஆகும் . இதே போல் பெட்ரோல் விலையை அரசு 5 ரூபாயும் பெட்ரோலிய நிறுவனங்கள் 5 ரூபாயும் உயர்த்தி உள்ளது பெட்ரோலிய பொருட்கள் மீது அரசு 20 வரை litre ஒன்றிக்கு வரி விதிக்கிறது . கச்சா என்னை விலை ஏறிகொண்டிருக்கும் இவ்வேளையிலும் வரி குறைப்பு அரசுக்கு நிதி நெருக்கடியை தரும் என்று மாண்புமிகு நிதியமைச்சர் கூறுகிறார் . ஆனால் வளர்ச்சி திட்டதிற்கு சலுகை என்ற பெயரால் சிறப்பு பொருளதார மண்டலம் என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட பகுதிகளான !சென்னையிலும் ,ஸ்ரீ பெரும்புதூர்ரிலும் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது . முழு வரிவிலக்கு அளிக்க படவில்லை என்றாலும் பெரும் கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும் ஏனினில் வரி விலக்கு என்பது அந்நிறுவனங்களின் லாபத்தை மேலும் அதிகரிக்கும் ஒரு செயல் அவ்வளவே .நம்முடைய நிதி அமைச்சருக்கு வரி என்ற பெயரால் நடுதரவர்கத்தின் பையில் உள்ள பணத்தை பிடிங்குவது பிடித்தமான ஒன்று . வட்டி விகிதம் உயர்வு விலை வாசி ஏற்றம் என்று எல்லாதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் .சென்னை யில் மட்டும் ஒரு நாளைக்கு 10 மில்லியன் litre பெட்ரோலியம் விற்பனை ஆகும் .அதாவது ஒரு நாளைக்கு அரசிற்கு 20 கோடி வரை வரிமூலம் வருவாய்கிட்டும் . ஆண்டிற்கு 7000 கோடி வருவாய் ? சென்னையில் மட்டும் , இதில் 50சதவிகிதம் உள்கட்டமைப்பிற்கு செலவிட்டு இருந்தால் கூட இன்று சென்னை உலகில் சிறந்த நகரமாக இருந்திருக்கும் .அரசியல்வாதிகளின் கொள்ளை அடிக்கும் பணமாக வரி பணம் விரையமாகி கொண்டுறிகிறது .

3 comments:

வால்பையன் said...

//வளர்ச்சி திட்டதிற்கு சலுகை என்ற பெயரால் சிறப்பு பொருளதார மண்டலம் என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட பகுதிகளான !சென்னையிலும் ,ஸ்ரீ பெரும்புதூர்ரிலும் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது //

அவனுங்க பொட்டி பொட்டியா பணம் கொடுப்பானுங்க
நீயும்,நானும் கொடுப்போமா அமைச்சருக்கு

//நம்முடைய நிதி அமைச்சருக்கு வரி என்ற பெயரால் நடுதரவர்கத்தின் பையில் உள்ள பணத்தை பிடிங்குவது பிடித்தமான ஒன்று //

அப்புறம் எப்படிப்பா உலக கோடிஸ்வரன் பட்டியல்ல பேர் வர்றது

//ஆண்டிற்கு 7000 கோடி வருவாய் ? சென்னையில் மட்டும் //

அடேங்கப்பா!!

//இதில் 50சதவிகிதம் உள்கட்டமைப்பிற்கு செலவிட்டு இருந்தால் கூட இன்று சென்னை உலகில் சிறந்த நகரமாக இருந்திருக்கும் //

குடும்ப செலவுக்கே பணம் பத்தலைன்னு சொன்னாங்க,எப்படி ஊருக்கு செலவு பண்றது

வால்பையன்

தியாகு said...

ஒருமித்த தங்களது கருத்திற்கு நன்றி

லேகா said...

நிதர்சனமான கட்டுரை..இந்தியா வல்லரசாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்..

பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/