பெருமையுடன் உங்கள் தியாகு.

Wednesday, May 21, 2008

பணம் காய்க்கும் மரம்

ipl போட்டியின் தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் பெற்று உள்ளது அனைவரும் அறிந்ததே . போட்டியின் இடையே ஒளிபரப்பாகும் விளம்பரத்திற்கு பத்து வினாடிக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது . இதே உலக கோப்பை t20யில் விளம்பரகட்டனமாக பதினைந்து வினாடிக்கு இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே அறை இறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கு விளம்பர கட்டணம் பத்து வினாடிக்கு பத்து லட்சம் என சோனி அறிவித்துள்ளது . இந்த மூன்று போட்டிகளின் முலம் சோனி ஆறு கோடி ரூபாய் வரை வருவாய் கிட்டும். தொலைக்காட்சி ஒருமை முலம் பெறப்படும் வருவாயில் இருபது சதவிகிதம் bcciகும் எழுபது சதவிகிதம் அணி உரிமையாளர் கும் கிடைக்கும் . கிரிக்கெட் iplபோட்டிகள் பொன்முட்டை இடும் வாத்து இல்லை அது ஒரு தங்க சுரங்கம் என்றே எனக்கு தோன்றுகிறது .

6 comments:

வால்பையன் said...

தங்க சுரங்கம் தான்
பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவான்

வால்பையன்

தியாகு said...

பல கோடி மக்கள் தொலைக்காட்சில் கிரிக்கெட் பார்க்க செலவிடும் அவர்களின் நேரத்திற்கான மதிப்பு இது .

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வால்பையன் அவர்களே

கூடுதுறை said...

ஹலோ தியாகு !


word verification யை எடுத்துவிடுங்கள்.


கிரிக்கெட்டில் விளையாட தெரிந்தவர்கள் அனைவருக்குமே இது ஒரு வரப்பிரசாதம் தான். இதுவரை சுமார் 16 பேருக்கு மட்டுமே ஜாக்பாட் அடித்துகொண்டிருந்தது.

அதிலும் சில மூதத வீரர்கள் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு ஜல்லி அடித்துக்கொண்டிருப்பதால் இளைய வீரர்களுக்கு
இது சூப்பர் சான்ஸ்.

8 டீமில் அற்புதமாக விளையாடும் 2பேர்களை சேர்த்தால் 16 பேர் கொண்ட இந்திய அணி உருவாகிவிடும்...

ஆனால் அப்படி செய்வார்களா?

தியாகு said...

Hi கூடுதுறை
இனி T20 சர்வேதேச போட்டிகளில் இந்திய அணி இல் மூத்த வீரர்கள் இடம்பிடிப்பது கடினமே . IPL போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் தவன் , யோமகேஷ் , வேன்கோபால் ராவ் . சதீஷ் நாயர். கோனி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம் . தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

g said...

கிரிக்கெட்டை பற்றி எழுதியிருக்கறீர்கள். நன்றாக உள்ளது. கிரிக்கெட் விளரம்பர வருமானம் - தங்க சுரங்கம் அருமையோ அருமை. தாங்கள் இதனை வயிற்றெறிச்சலோடு எழுதினீர்களா?

தியாகு said...

ஜிம்ஷா said...
கிரிக்கெட்டை பற்றி எழுதியிருக்கறீர்கள். நன்றாக உள்ளது. கிரிக்கெட் விளரம்பர வருமானம் - தங்க சுரங்கம் அருமையோ அருமை. தாங்கள் இதனை வயிற்றெறிச்சலோடு எழுதினீர்களா

இல்லை ஜிம்ஷா. கிரிக்கெட் எனக்கு பிடித்தமான விளையாட்டு.தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி